NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு 2019-20ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

0
சந்தா 1

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் நிதியிலிருந்து முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு 2019-20ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

தகுதிகள் மற்றும் நிபந்தனைகளாக, 1 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள இரு குழந்தைகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம்.  சம்மந்தப்பட்ட குழந்தையின் பெயர் Part-II Order -ல் அல்லது குடும்ப உறுப்பினர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

www.ksb.gov.in என்ற இணையதளத்தில் Online மூலமாக மட்டுமே விண்ணப்பித்திட இயலும்.

சந்தா 2

ஜேசிஓ மற்றும் அதற்கும் மேலான தரத்தினர் இதன்கீழ் விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பம் KSB -க்கு ஓன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை 30-09-2019-க்குள்ளும் மற்றும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு 30.10.2019க்குள்ளும் அனுப்ப வேண்டும் என்பதால் நாளது தேதிக்கு முன்னதாக விண்ணப்பித்திடல் வேண்டும்.

மேற்கண்ட நிபந்தனைகளுக்கேற்ப முழுமையான விவரங்கள் /சான்றுகள் இல்லாத மற்றும் குறிப்பிட்ட தேதிக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிந்துரைக்க இயலாது.

இது தொடர்பான விவரங்களை, திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகிப் பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.