NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி பலி !

0
1

துறையூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி பலி !

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த வேங்கடத்தானூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் விவசாயி இவரது மகள் அஞ்சலி என்கிற பரமேஸ்வரி (16) இவர் செங்காட்டுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். அஞ்சலி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று பள்ளிக்கு செல்லவில்லை .

3
A schoolgirl died after falling into a well!
A schoolgirl died after falling into a well!

வீட்டில் இருந்த அஞ்சலி தாங்கள் வளர்க்கும் ஆடுகளுக்கு தண்ணீர் வைப்பதற்காக வயலின் அருகாமையில் உள்ள அம்மையப்பன் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் நீர் இரைக்க சென்றுள்ளார் அப்பொழுது எதிர்பாராவிதமாக நிலை தடுமாறி கிணற்றில் தவறி விழுந்து விட்டார் இது பற்றி அக்கம் பக்கத்தினர் துறையூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர் தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) பாலச்சந்தர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

25 அடி நீள அகலம் , 40 அடி ஆழமுள்ள கிணற்றில் 35 அடி தண்ணீரில் சுமார் 3 மணி நேரம் போராடி , நீரில் முழ்கி இறந்த அஞ்சலியின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் இது பற்றி துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் உடல்நிலை சரியில்லாத பள்ளி மாணவி கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் ,சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது

4
Leave A Reply

Your email address will not be published.