இந்த கைபேசி தான் என் இந்த ரயில் பயணத்திற்கு காரணம் என்றார்.என்ன அய்யா என்ன ஆயிற்று எனக் கேட்டேன்.
நான்கு வருடங்களுக்கு முன் என் மகன் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கையில் ஏதோ படிப்பதற்கு வேண்டும் எனக் கேட்டு வாங்கிக் கொண்டான்.சிறிது நாட்கள் மாற்றம் ஒன்றும் பெரிதாய் இல்லை இருந்தாலும் புத்தகத்தை விட கைபேசியையே அதிக நேரம் கையாண்டான்.
படிக்கச் சொன்னால் இதில் படித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என்ற பதிலும் நொடி தாமதமில்லாமல் வந்திடும்.மேலும் இரவிலும் உறக்கத்தை தொலைக்க தொடங்கினான்,கைபேசி இல்லாத வாழவில்லை என்னும் நிலைக்கு தள்ளப்பட்டான்.
இதை காணும் ஒவ்வொரு நொடியும் குற்ற உணர்ச்சி என்னை சூறையடியாக் கொண்டு இருந்தது.
வாங்கிக் கொடுத்து மகனின் வாழ்வை அழித்து விட்டோமோ என்னும் குற்ற உணர்வே என்னை வாழ்க்கை ஓட்டத்தில் சோர்வடைய வைத்தது.அவன் கொஞ்சம் கொஞ்சமாய் நஞ்சை உண்பது போல் தோன்றியது கைபேசி எடுத்து ஒளித்துக் கொண்டேன்.
தன்னை இழந்ததாய் எண்ணி மூளை வளர்ச்சி இல்லாத குழந்தை போல் நடந்தான் அந்த நேரம் அவன்.அதை காண இயலாது கைகளில் கொடுத்தேன்,புன்னகை முகத்தில் காட்டி பெருமூச்சு விட்டான் அப்படியே தனியே நடந்து சென்றான்.காலங்கள் மாறியது தனிமையே முழுமையாய் ஏற்றான் உணவும் குறைக்க தொடங்கினான்.

உற்சாகம் இழந்தான் கூட்டம் அதை கண்டால் ஓடி ஒழிய தொடங்கினான்,உற்றார் உறவினர்கள் மறந்தான்,சொந்தங்கள் சுத்தமாய் மறந்தான்.தன்னாலே சிரிக்கத் தொடங்கினான் காதல் மலர்ந்ததோ என நினைத்தேன் ஆனால் அப்படி எதுவும் இல்லை இருந்தும் எதற்காக சிரித்தான் என தெரியவில்லையே குளம்பிப் போய் நின்றேன். இவன் பார் அதை பார்க்கும் தருணம் என் பாவை அவள் என்னை பிரிந்து சென்றால் பாதியிலே.
வாழ்வின் மிகப்பெரிய பொருப்பாய் எண்ணி இவனை வளர்த்து நல்ல நிலைமை வந்ததும் நம் வாழ்வதை பார்த்து கொள்வோம் என எண்ணி வாழ்க்கையே இவன் ஆன பின் என் செய்வது என என் உணர்வுகளை கட்டுப் படுத்தி வாழத் தொடங்கினேன் ஆனால் இவனோ இப்படி அந்த கையடக்க கைபேசியில் மூழ்கித்தான் கிடக்கிறானே என மனம் குமுறுகிறது நித்தமும்.
திடீரென்று ஒரு நாள் கல்லூரி தொடங்கும் நேரம் தவறியும் இவன் அரை அதை விட்டு வெளியே வராமல் இருந்ததால் என்ன வென்று அறியாது கதவை தட்டிப் பார்த்தேன் மௌனமே மலைத்து நின்றது. செய்வதறியாது சளராக் கதவுகளின் வழியே பார்த்து கூப்பிட முற்பட்டேன்.
கயிற்றில் தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்தான் என் ஆசை மகன்.
இமைகள் இமைக்க மறுத்தது,இந்த நொடி கனவாகவும் இருந்திட கூடாது என ஏங்கியது என் இதயம்.

அலறிக்கொண்டே உள்ளே ஓடி கதவுகளை உடைக்க முற்பட்டு கையில் கிடைத்ததை எடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று தொங்கிக் கொண்டிருந்த என் மகனை கீழ் இறக்கினேன்.
குழந்தை பருவத்தில் ஊஞ்சலில் தொங்கிக் கொண்டிருக்கும் மகனைக் கண்டு ஆனந்தத்தில் குதித்த உள்ளம், இக்காட்சி கண்டு குமுறுகிறது.
கண்களில் நீர் ததும்பித் தான் நின்றது செய்வதறியாது.அக்கம் பக்கம் யாரையாவது அழைப்போமா அல்லது தற்கொலை என்றல்லாது மாரடைப்பு என்று கூறி அவசர ஊர்தி அழைக்கலாமா என்னும் சிந்தனைகள் மூளையே மூச்சு முட்டும் அளவிற்க்கு சுற்றித் திரிந்தது.
அவன் கைபேசி என் கண்ணில் பட்டது கையில் எடுத்து அவன் கை ரேகையை வைத்து காதல் தோல்வி அடைந்து செய்தானோ என எண்ணித்தான் குறுஞ்செய்திகள் படிக்கத் தொடங்கினேன்.
என் ஆசை மகனின் தற்கொலைக்கு காரணம் கிடைக்குமோ என எண்ணியே அதில் நண்பன் ஒருவனுக்கு “மச்சான் மன்னிச்சிரு டா என் தனிமையே என்னை கொன்னுருச்சு அப்பாவை மட்டும் கொஞ்சம் பாத்துக்கோ டா என்னை விட்டா அவருக்கு யாரும் இல்லை” என குறுஞ்செய்தி அனுப்பி இருந்ததை படித்து கண்ணீர் விடுவதை தவிர வேறென்ன செய்ய முடியும் என்னால்.
மாரடைப்பு என நம்பவைக்கும் முயற்சியில் இறங்கி அலறிக்கொண்டே வெளியே சென்றேன்.அனைவரும் உள்ளே வந்து பார்த்து உங்கள் மகன் இறந்து விட்டான் இனி மருத்துவமனை சென்றும் பயனில்லை என்றனர்.
கண்ணீர் வீட்டுக் கதறினேன் கடவுளையும் சபித்தேன் கடந்த நேரம் கிடைக்குமோ என ஏங்கினேன்.கிடைத்திருந்தால் காலத்தின் முன் சென்று கைபேசி வாங்கிக் கொடுக்காமல் இருந்திருப்பேன்.
இறுதி சடங்கு முடித்தேன்.இருந்த சொத்துக்கள் விற்று முடிந்தவரை உதவி செய்து கையில் காசு தீர்ந்ததும் இரக்க தொடங்கினேன் அதில் கிடைத்த பணத்தில் ஒரு ஆதரவற்றோர் நலக் காப்பகம் தொடங்க முயற்சிக்கலாம் என இருக்கிறேன் .
அது தொடர்பாகவே கோவை செல்கிறேன் என்றார்.
கல்நெஞ்சக் காரன் என் கண்களிலும் கண்ணீர் ததும்பியது.
தான் நஞ்சுண்ட போதும் பிறருக்கு அமிர்தம் கொடுக்க என்னும் முதியவர் கண்டு மலைத்துப் போனேன்.
உடனே அந்த அய்யா “தம்பி என்ன பார்த்த அதை எனக்கும் காட்டச் சொல்லி கேட்டேன் எனக் கேட்டார்”…….
தொடரும்…..
-சண்முக நாதன்
