தனிமை பயணம்-1
கார் கால காதல் பயணமாய் மலைகளின் அரசியை காண சாம்பல் மேகங்கள் சந்திரனை மறைக்கும் இருளில் தொடர்வண்டி பயணமாய் தொடங்கினேன்.முன்பதிவில்லா பெட்டியில் முண்டியடித்து உட்கார இடம் கண்டு உட்கார்ந்து காதுகளில் பாடல் வரிகளை பதிய செய்து இரவு நேரத்தை இசையில் கழிக்க முற்பட்டேன்.
எதிர் இருக்கையில் முகம் தெரியா முதிர்ந்த மனிதன்”இந்த காலத்து பசங்கலாம் என்ன தான் பசங்களோ தெரியல, காதுல ஒண்ணு மாட்டிக்கிறாங்க எங்கயாச்சும் போறதா இருந்தா, எங்க காலத்துலலாம் ஜன்னல் வழியா அப்டியே அந்த இயற்கை ரசிச்சுகிட்டே அக்கம் பக்கம் இருகவங்க கூட பேசிட்டே போவோம் இவங்க கூட போறந்தவங்க கிட்ட கூட பேச மாற்றங்க என்ன தான் இருக்குமோ அதுல” வார்தைகளாலே கொலை செய்யும் அளவுக்கு கோபத்துடன் பார்த்தார்.
பயணத்தின் மகிழ்வில் இருந்த என் இதயத்தை துண்டாக உடைத்தது அவரின் வார்த்தைகள்.அச்சத்துடனே மிச்ச நேரம் கழிக்க பாடல்களை கேட்க தொடங்கினேன்.வரிகளில் மூழ்கியே என்னை அறியாது பாடத் தொடங்கினேன்.அனைவரும் விழிகளில் கதிர்வீச்சுகளாய் பார்க்கத் தொடங்கினார்கள்.
ஏதோ அவர்களுக்குள் பேசிக்கொண்டு என்னை பார்த்து சிரித்தனர்.நான் மெதுவாக எழுந்து வாசல் நின்று இசையோடு இனிமை கண்டேன். குளிர் காற்றோடு கூடிய கூந்தல் முகத்தில் வருடிச் சென்றது.எட்டிப் பார்த்தேன் எங்கோ பார்த்த முகம் இதயத்தில் பதிந்த முகத்தை விழிகளாலே அலசினேன்.

பள்ளி நாட்களில் தினம் காணும் கலையரசி அவள் என்னை விட நான்கு வயது சிரியவள் கண் சிமிட்டாமல் பார்வையிலே கொஞ்சும் அழகு மிஞ்சித் தான் என் கற்பனைகளும் காற்றில் மிதந்தது.
சிறிது நேரத்தில் உறக்கம் அது உச்சத்தில் நின்றது கண்களில் கண்கள் மூடவே தயாராகி தூங்கத் தொடங்கினேன்.திடீரென்று முதியவர் என்னை தட்டி எழுப்பி கைகளில் என் கைபேசியுடன் என்னைப் பார்த்தார்.

எனக்கோ தூக்கி வாரிப் போட்டது கால்சட்டை பையில் வைத்த கைபேசி இந்த கிழவனின் கைகளில் எப்படி என்று, தூக்கி வீசிவிடுவாரோ! என்னும் பயம் உள்ளுக்குள் தலைவிரித்து ஆடியது.
சட்டென்று அவர் அதை என் கைகளில் தந்து நீ இதில் என்ன பார்த்தாய் என எனக்கு வைத்துக் கொடுத்து விட்டு உறங்கு என்றார்.கைபேசி பாவம் அந்த கிழவனின் உள்ளத்தையும் கையாடல் செய்து விட்டது என எண்ணி சிரித்துக் கொண்டே இதை எப்படி எடுத்தீர்கள் எனக் கேட்டேன்.
நீ திரும்பி படுக்கும் நேரம் கீழே விழுந்தது என்று கூறி என்னை திருடன் என நினைத்தாயோ ! எனக் கேட்டார். இல்லை அய்யா என் பையில் வைத்த கைபேசி உங்கள் கைகளில் கண்ட அதிர்ச்சி என்றேன்.
என்ன பார்த்தாய் எனக் கேட்டேன் என்றார் அவர்.அய்யா உங்கள் தலைமுறை கண்டிராத சமூக வலைதளங்களை கண்டேன் அதில் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டு இருந்தேன் எனக் கூறியதும் அவர் முகத்திற்கு நேர் உரையாடியது கிடையாதா எனக் கேட்டார்.
ஏதோ இந்த வார்த்தை என்னை தலைகுனியச்செய்தது.
இப்படி தான் என் மகன் நான்கு வருடங்களுக்கு முன் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கையில் கைபேசி வேணும் எனக் கேட்டான். நானும் வாங்கிக் கொடுத்தேன் ஏதோ படிக்கவேண்டும் எனக் கேட்டதால்,அதனால் தான் நான் இப்பொழுது இந்த ரயிலில் இருக்கின்றேன் என்றார்…..
தொடரும்…. 😄
-சண்முக நாதன்
