NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

துறையூர் சிவன் கோவிலில் கார்த்திகை சோமவாரப் பிரதோஷம். 108 சங்காபிஷேகம்

0
1

 

துறையூர் சிவன் கோவிலில் கார்த்திகை சோமவாரப் பிரதோஷம்.
108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

3

வருடந்தோறும் கார்த்திகை மாதம் வரக்கூடிய ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவபெருமானுக்கு உகந்த நாளாக பக்தகளால் , “சோமவாரம் ” என அழைக்கப்படுகிறது. திங்கட்கிழமை தோறும் சிவாலயங்களில் 108 வலம்புரி சங்குகளில் புனித நீர் நிரப்பி சிறப்பு வழிபாடு செய்து சிவபெருமானுக்கு சங்கு நீரால் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். நேற்றைய தினம் கார்த்திகை சோமவாரத்துடன் கூடிய பிரதோஷமும் சேர்ந்தே வந்ததால் திருச்சி மாவட்டம் ,துறையூர் பாலக்கரை நந்திகேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நந்திகேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகத்தை முன்னிட்டு காலை 11 மணியளவில் அனுக்ஞை , கணபதி ஹோமம் , ருத்ர ஹோமம் அதனைத் தொடர்ந்து பூர்ணாஹுதி நடைபெற்றது. பின்னர் மகாநந்தியின் முன்பாக 108 வலம்புரி சங்குகளைக் கொண்டு வேதிகை அமைக்கப்பட்டது. வேதிகையைச் சுற்றி கிண்ணங்களில் நெல் தானியம் வைத்து அதன் மேல் வலம்புரி சங்குகளில் புனித நீர் கொண்டு நிரப்பி பூக்கள் கொண்டு அலங்காரம் நடைபெற்றது. வேதிகையின் மேல் பிரதான கலசம் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

துறையூர் சிவன் கோவிலில் கார்த்திகை சோமவாரப் பிரதோஷம்.
108 சங்காபிஷேகம்

மாலை மகா நந்தியம் பெருமானுக்கு சோமவாரப் பிரதோஷத்தை முன்னிட்டு மஞ்சள் தூள், திருமஞ்சனம் , பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பிரதோஷ நாயனாருக்கு சிறப்பு வழிபாடும், தீபாராதனையும் நடைபெற்றது. மேலும் சோமவாரத்தை முன்னிட்டு மூலவரான நந்திகேஸ்வரருக்கு பால் , பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று , 108 சங்குகளில் உள்ள புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முதல் சோமவார சங்காபிஷேகத்தில் கோவில் நிர்வாக அதிகாரி வேணுகோபால் , மாவட்ட அறங்காவலர் நியமனக்குழுத் தலைவரும், நகர்மன்ற துணைத் தலைவருமான மெடிக்கல் முரளி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் விஜயராகவன் , துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் நிகழ்ச்சியில் துறையூர் மற்றும் சுற்று வட்டாரத்திலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் சங்காபிஷேக தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

4
Leave A Reply

Your email address will not be published.