NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

துறையூரில் பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் போக்சோ சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் !

0
1

துறையூரில் பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் போக்சோ சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் .

திருச்சி மாவட்டம், துறையூரில் திருச்சி ரோட்டில் உள்ள சிஎஸ்ஐ மேல் நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போக்சோ சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு முசிறி டிஎஸ்பி யாஷ்மின் தலைமை வகித்தார். துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஏசுகுமார் வரவேற்றார்.

மாணவ மாணவரிடையே பேசிய டிஎஸ்பி யாஷ்மின், “மாணவ, மாணவிகள் படிப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மேலும் சமுதாயத்தில் குறிப்பாக மாணவிகள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தற்போதுள்ள காலகட்டங்களுக்கு ஏற்ப சமூக வலைதளங்களில் மாணவிகள் மிக கவனமாக இருக்க வேண்டும். என பேசியதுடன் போக்சோ சட்டம் குறித்து விளக்கமளித்து பேசினார்.

3
POCSO Legal Awareness Seminar
POCSO Legal Awareness Seminar

அவரைத் தொடர்ந்து பேசிய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் , “சட்டம் என்பது ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவானது .அதிலும் குறிப்பாக பெண்களைப் பாதுகாப்பதற்கென்றே அரசால் அமல்படுத்தப்பட்ட போக்சோ சட்டம் மிகக் கடுமையானது.

மாணவ , மாணவிகள் செல்போனில் கவனத்தை அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்து , பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லித் தரும் கல்வியை தங்களின் முழுக்கவனத்தையும் செலுத்தினால் , எதிர்காலத்தில் சமூகத்தில் அவரவர் நினைத்தபடி மிகப் பெரிய பதவிகளை அடைந்து வெற்றி காணலாம்.” எனப் பேசினார்.நிகழ்வில் காவல் உதவி ஆய்வாளர் சந்திரகாந்த் , பயிற்சி உதவி ஆய்வாளர் கோமதி பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஐசக் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர்.

4
Leave A Reply

Your email address will not be published.