NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

காவிரி ஆற்றிலுள்ள நீர் ஏற்று நிலையத்தை ஆய்வு செய்த மணப்பாறை எம்எல்ஏ

0
1

காவிரி ஆற்றிலுள்ள நீர் ஏற்று நிலையத்தை ஆய்வு செய்த மணப்பாறை எம்எல்ஏ

கடந்த 1991 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர் பகுதி மக்களுக்கும், கரூர் மாவட்டத்தில் வழியோரம் உள்ள 30 கிராமங்களுக்கும் மணப்பாறை காவிரி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க, கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி, மணத்தட்டை காவிரி ஆற்றில், நீரேற்று கிணறு அமைக்கப்பட்டது.

நீர் ஏற்று நிலையத்தை ஆய்வு செய்த மணப்பாறை எம்எல்ஏ
நீர் ஏற்று நிலையத்தை ஆய்வு செய்த மணப்பாறை எம்எல்ஏ

இதன் மூலம் மணப்பாறை நகர் பகுதி மக்களுக்கும், கரூர் மாவட்டத்தில் வழியோரம் உள்ள 30 கிராமங்களுக்கும் காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நீரேற்று கிணறு அமைக்கப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நீர் உறிஞ்சு கிணறில் ஏற்பட்டுள்ள பழுதால் , மணப்பாறை நகர் பகுதி மக்களுக்கும், 30 வழியோர கிராம மக்களுக்கும் குடிநீர் பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளது.இந்த குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

3

இதனை அடுத்து, ரூபாய் 17 கோடியே 70 லட்சத்தில் புதிதாக இரண்டு நீர் உறிஞ்சி கிணறுகள், மற்றும் 19 கிலோமீட்டர் தூரம் வரை கல்னார் குழாய்களுக்கு பதிலாக, இரும்பு குழாய்கள் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீர் ஏற்று நிலையத்தை ஆய்வு செய்த மணப்பாறை எம்எல்ஏ
நீர் ஏற்று நிலையத்தை ஆய்வு செய்த மணப்பாறை எம்எல்ஏ

இதனை அடுத்து மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது குளித்தலை நகர் பகுதி மணத்தட்டை காவிரி ஆற்று பகுதியில் உள்ள மணப்பாறை குடிநீர் நீரேற்று நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மணப்பாறை காவிரி குடிநீர் திட்ட உதவி செயற்பொறியாளர் தங்கராஜ், உதவி பொறியாளர் ஜெகதீசன், ஆகியோர் நீரேற்று நிலைய செயல்பாடுகள் குறித்தும், பழுது குறித்தும் செய்யப்பட உள்ள பணிகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

நீர் ஏற்று நிலையத்தை ஆய்வு செய்த மணப்பாறை எம்எல்ஏ
நீர் ஏற்று நிலையத்தை ஆய்வு செய்த மணப்பாறை எம்எல்ஏ

ஆய்வின்போது, மணப்பாறை நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல்ராஜ், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் காதர் மொய்தீன், திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் அகமது, கரூர் மாவட்ட துணை செயலாளர் அயூப் கான், குளித்தலை நகர செயலாளர் முகமது லியாகத், நகரப் பொருளாளர் நவ்ஷத் அலி மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

4
Leave A Reply

Your email address will not be published.