லால்குடி அருகே குழாயில் தண்ணீர் பிரிப்பது தொடர்பான தகராறில் 3 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சி,நவ.28 லால்குடி அருகே குழாயில் தண்ணீர் பிரிப்பது தொடர்பான தகராறில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொத்தமங்கலம் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் வயது 29 இவர் தனது வீட்டின் அருகே உள்ள தண்ணீர் குழாயில் குளித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த கலையரசி என்பவர் அங்கு தண்ணீர் பிடிக்க வந்துள்ளார் . அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .

இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதை அடுத்து அருண்குமார் மற்றும் கலையரசி இருவரும் காயம் அடைந்து லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து லால்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நம்ம திருச்சி செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/2fzPX6Xk74u1Jvo2IcaWSe
