திருச்சியில் தோல் வெடிப்பு நோய் பாதிப்புக்கு மருத்துவ உதவி கேட்டு சிறுமி மனு !

மருத்துவ உதவி கேட்டு மனு திருச்சி,
நவ,28 தோல் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் சிறுமிக்கு மருத்துவ உதவி மற்றும் மாற்றுத் திறனாளிக்கான நிதி உதவியை வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருச்சி மண்ணச்சநல்லூர் வட்டம், திருவெள்ளரை அருகே உள்ள தில்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் அருள் குமார்.
இவரது மனைவி கௌசல்யா . இவர்களது மூத்த மகள் கிரிஜா வயது 11 அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பிறந்தது முதல் தற்போது வரை உடல் முழுவதும் ஒருவகையான தோல் வெடிப்பு நோய் பாதிப்புக்கு உள்ளாகி பெரும் அவதிப்பட்டு வருகிறார்.

வெயில் காலங்களில் சிறுமியின் உடலில் இருந்து தோல் காய்ந்து வலி ஏற்படும் போது உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றிக் கொண்டு வாழ்ந்து வரும் சூழ்நிலையில் சிறுமி அவதிப்பட்டு வருகிறார்.

இவருக்கு மருத்துவ உதவி கேட்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாத உதவி தொகையை சிறுமிக்கு வழங்க கோரியும் அவரது தாத்தா லோகநாதன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
நம்ம திருச்சி செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/2fzPX6Xk74u1Jvo2IcaWSe
