
திருச்சி,நவ.28 பிரமாண்ட கம்பத்தில் திமுக கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சிவி நகர் பகுதியில் திமுக கொடி கம்பம் 70 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கொடி மரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக கொடி ஏற்றி தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துணைப் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜா, திமுக முதன்மைச் செயலாளர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு, மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மு. மதிவானன் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன் கே என் சேகரன், என் கோவிந்தராஜன் குணசேகரன், செந்தில், பகுதி கழகச் செயலாளர் மோகன், ராஜ், தர்மராஜ், மணிவேல், நீலமேகம், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் திமுக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர்கலந்து கொண்டனர்.
நம்ம திருச்சி செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/2fzPX6Xk74u1Jvo2IcaWSe
