
வியாபாரிகள் நல சங்க கூட்டம் திருச்சி,நவ.28 திருச்சி காந்தி மார்க்கெட் பழம் மொத்தம் மற்றும் சிறு வியாபாரிகள் நல சங்க ஆலோசனைக் கூட்டம் பாலக்கரை சந்தன மஹாலில் நடந்தது. சங்கதலைவர் கோபி தலைமை வகித்தார் . செயலாளர் பொன்ராஜ் வரவேற்றார்.
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன், செயலாளர் மூர்த்தி, கூடுதல் செயலாளர் ஜெகன், பொருளாளர் சபி அகமது, துணைத் தலைவர் நூர்முகமது, துணைப் பொருளாளர் சுதுணைப் பொருளாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜீலு, பேசினார். கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் தமிழ்செல்வம், திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர் செந்தில் பாலு, மாவட்ட பொருளாளர் தங்கராஜ், மாநில இணை செயலாளர்கள் ராஜாங்கம், கருப்பையா, இளைஞரணி தலைவர் அப்துல் ஹக்கீம், துணைத் தலைவர் முருகானந்தம், துணைச் செயலாளர்கள் மரியராஜ், சதீஷ்குமார், இணைச் செயலாளர் தங்கராஜ் என்கிற சேட்டு, பொதுக்குழு உறுப்பினர்கள் அப்துல்லா, ஜீசஸ் ஜோஸ்வா, வீரமணி, ஹாமித்பாஷா, மாங்காய், கிழங்கு காய்கறி வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கே. டி. தங்கராஜ், செயலாளர் ஜமால் முகமது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நம்ம திருச்சி செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/2fzPX6Xk74u1Jvo2IcaWSe
