
இலங்கை எழுத்தாளருக்கு பாராட்டு “”இனிய நந்தவனம்”” வாசகர் வட்டம் சார்பில் இலங்கை எழுத்தாளர் ஞானசேகருக்கு பாராட்டு விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருச்சி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. திருச்சி எழு தமிழ் இயக்க தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார்.


திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க அமைச்சர் பொறுப்பு உதயகுமார் முன்னிலை வகித்தார் நிகழ்வில் ஞானசேகரனின் இதழியல் பணியை பாராட்டி வாசகர் வட்டம் சார்பில் இதழியல் மாமணி விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, தொழிலதிபர் முகமது அக்பர் சித்திக்சென்னை ஜேப்பியார் பல்கலைக்கழக முனைவர் அன்பு சிவா கவிஞர் தனலட்சுமி பாஸ்கரன் கோவிந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர் .
