
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் பா. ஜ. க திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
அதில், திருவெறும்பூர் மலைக்கோவில் அருகில் தனியார் மாட்டிறைச்சி உணவகம் வர உள்ளது இந்த உணவகம் கோயில் மிகவும் அருகில் உள்ளது . இந்த மாட்டிறைச்சி உணவகத்தால் பிரதோஷம் மற்றும் தேர் உலாவரும் நாட்களில் மிகவும் இடையூறாக இருக்கும்.

இந்த மாட்டிறைச்சி உணவகத்தை தடைசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பாஜக மாவட்ட ஊடக பிரிவு தலைவர் சி. இந்திரன் ,மண்டல் தலைவர்கள் பாண்டியன் செந்தில்குமார் மாவட்ட நிர்வாகிகள் சந்துரு ஜெயந்தி மணிமேகலை மற்றும் மனோகரன் வேங்கூர் கார்த்தி காந்திநகர் குமார் ராம்கி கருப்பையா காமராஜ் உட்பட கலந்து கொண்டனர்.
நம்ம திருச்சி செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/2fzPX6Xk74u1Jvo2IcaWSe
