
சரும பொலிவிற்காக சில டிப்ஸ்!
சருமப் பராமரிப்பில் மிகவும் முக்கியமானது நிறைய தண்ணீர் குடித்தல் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் உடலில் தேங்கி இருக்கும் நச்சுத்தன்மை மற்றும் கழிவுகள் வெளியேறி சருமம் பொலிவு பெறும்.
வறண்ட சருமம் கொண்டவர்கள் பாலாடையை அவ்வப்போது தடவி வந்தால், சரும வறட்சி நீங்கி ஈரப்பதத்துடன் ஆரோக்கியமாக இருக்கும். எண்ணெய் தன்மைகொண்ட சருமத்தில் பாலாடையுடன் ரோஜா பன்னீர் அல்லது தயிர் கலந்து மாஸ்க் போன்று பயன்படுத்தலாம்.

கண்களுக்குக் கீழ் உருவாகும் கருவளையம் முகத்தின் அழகைக் கெடுக்கும். ரோஜா பன்னீர், வெள்ளரிச் சாறு இரண்டையும் கலந்து ஐஸ் டிரேயில் உறைய வைக்கவும். இந்த ஐஸ் கட்டியை கண்களைச் சுற்றிலும் மென்மையாகத் தடவி வந்தால் விரைவில் கரு வளையம் நீங்கும்.
கண்ணுக்கு கீழ் கருவளையம் இருப்பவர்கள் மனஅழுத்தத்தைக் குறைப்பது அவசியம். இரவில் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் முக்கியமானது.

கற்றாழை ஜெல்லை கண்களைச் சுற்றி உள்ள சருமத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி விடலாம். இது கருவளையங்கள் நீங்கி கண்கள் பளிச்சிட உதவும்.
தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மென்மையான, ரசாயனம் சேர்க்காத சோப்பு கொண்டு முகத்தைக் கழுவிய பின்பு ரோஜா பன்னீரை சுத்தமான பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் துடைக்கவும். இது முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கும். அதன் பின்னர் மாய்ஸ்சுரைசர் அல்லது கற்றாழை ஜெல் தடவி முகத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம்.
