NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

சேமிப்பு பணத்தை சரியாக செலவழிக்கும் வழிகள்!

0
1

சேமிப்பு பணத்தை சரியாக செலவழிக்கும் வழிகள்!

திட்டமிடல்:  சேமிப்பு பணத்தை எந்தெந்த தேவைகளுக்காக, எவ்வளவு செலவழிக்க வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும். இது தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்க உதவும். சரியாக திட்டமிட்டு செலவழிக்கும் பட்சத்தில், சேமிப்பையும் அதிகரிக்க முடியும். உங்களிடம் இருக்கும் பணத்தின் அடிப்படையில் வாங்கவேண்டிய பொருட்களை திட்டமிடுங்கள். இது தேவையற்ற பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க உதவும்.

4

தள்ளுபடிக்காக காத்திருங்கள்: நீங்கள் வாங்க நினைக்கும் பொருள், உங்கள் கையிருப்பை விட விலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் தள்ளுபடிக்காக காத்திருந்து வாங்குவது பயனளிக்கும். உங்களிடம் வாங்கும் அளவிற்கு பணம் இருந்தாலும் தள்ளுபடியில் வாங்குவது பணத்தை சேமிக்க உதவும்.

செலவுகளை கண்காணியுங்கள்: நிதி மேலாண்மையில் செலவுகளை கண்காணிப்பது முக்கியம். முந்தைய மாத செலவுகளோடு, தற்போதைய செலவுகளை ஒப்பிட்டு பார்த்து பண மேலாண்மையில் நாம் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ளலாம்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.