
திருச்சி ஓலையூர் பகுதிக்கு கூடுதல் பேருந்து சேவை!
பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வரிடம்,
ஓலையூர் சிப்பி நகர் குடியிருப்போர் தங்களது பகுதிக்கு கூடுதல் பேருந்து சேவை வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் லிமிடெட் திருச்சி மண்டலம் சார்பில், கே.கே நகர் முதல் ஓலையூர் வரை மகளிர்க்கான கட்டணமில்லா பேருந்து சேவையுடன் கூடிய கூடுதல் பேருந்து சேவையை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி பேருந்து சேவை தொடக்க விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடியசைத்து சேவையை தொடங்கி வைத்தனர்.
அப்போது, ஶ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி பேருந்தை சிறிது தூரம் ஓட்டி சென்றார்.
