
திருப்பாலத் துறையில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம்!
திருச்சி திருப்பாலத் துறையில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு ஸ்ரீரங்கம் கோட்டம் உத்தமர்சீலி கால்நடை மருத்துவமனை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

இம்முகாமை பனையபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமரன் தொடங்கி வைத்தார். உத்தமர்சீலி கால்நடை மருத்துவர் சத்யா தலைமையில் டாக்டர் பிரியதர்ஷினி, எல்.ஐ ஜெகதீசன், பாரதி கொண்ட குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்கம், சினை பரிசோதனை, சிறு அறுவை சிகிச்சை, தாது உப்பு கலவை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதில் திருப்பாலைத்துறை மற்றும் பனையபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான கால்நடைகளுக்கு பரிசோதனையும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
