
தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை புறப்பட்டார்!
திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட அரசு விழாக்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.28 ம்தேதி திருச்சி மாவட்டம் காட்டூரில் வானவில் மன்றம் திட்டத்தை தொடங்கி வைத்த அவர் ,அன்று மாலை அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம், மாளிகை மேடு பகுதியில் நடக்கும் அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டார்.

29 ம் தேதி காலை அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர், நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்னை புறப்பட்டார்.
திருச்சி விமான நிலையத்துக்கு வந்த அவரை திருச்சி மாவட்ட ஆட்சியர்
பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், கமிஷனர் வைத்தியநாதன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கி வழி அனுப்பினர்.
