
பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது!
புத்தாநத்தம் கருமலை பகுதியில் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பூச்சி கவுண்டர் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரை கைது செய்தனர் .
அவர்களிடம் இருந்து 450 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
