
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்! விற்பனை செய்த பேக்கரிக்கு சீல்!
முசிறி காவேரி பாலம் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள முருகன் பேக்கரி அண்ட் ஸ்வீட் கடையை ஆய்வு செய்தனர்.

அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா போன்ற புகையிலை பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவை பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேனா ஐஏஎஸ் , தடையானை உத்தரவின் பேரில் முருகன் பேக்கரி ஸ்வீட்ஸ் கடைக்கு சீல் வைக்கப்பட்டது..
