
அடிப்படை வசதிகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!
துறையூர் ஒன்றிய செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயசீலன் ,மாவட்ட செயற்கு உறுப்பினர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினர்.

சொந்த வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனை வழங்க வேண்டும்.
60 வயது முடிந்த முதியோருக்கு உதவி தொகை வழங்க வேண்டும் .
முதியோர் உதவித்தொகை நிறுத்தியதை மீண்டும் வழங்க வேண்டும்.
பல ஆண்டுகளாக குடியிருந்த வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும்.
அனைத்து கிராமப்புற பஞ்சாயத்துகளுக்கும் குடிநீர் ,சாக்கடை ,தெரு விளக்கு, சாலை, மயான கொட்டகை ஆகிய வசதிகளை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
