
அகவிலைப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வலியுறுத்தி திருச்சியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், அகவிலைப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வலியுறுத்தி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்க மாவட்ட தலைவர் குமார் தலைமை வகித்தார். கடந்த ஜூலை மாதம் நிறுத்தப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும். 2004 முதல் 2005 ஆண்டு வரை பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும்.
மணப்பாறை, துறையூர் பகுதிகளை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டக் கல்வி அலுவலகங்கள் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
