
மகா தீபத்துக்கான 300 மீட்டர் திரியானது மலைக்கோட்டை கோயில் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது!
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். செப்புக்கொப்பரையில் 300 மீ்ட்டர் அளவுள்ள மெகா திரி வைக்கப்பட்டு 900 லிட்டர் எண்ணெய் ஊற்றி கார்த்திகை மகா தீபம் ஏற்றுவது வழக்கம.

இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா வரும் 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கொப்பரைக்கு, திரியை ஏற்றும் பணிகள் தொடங்கின.
நீண்ட கயிற்றில் 300 மீட்டர் நீளம் கொண்ட திரி பண்டல் கட்டப்பட்டு அதை மேலே இருந்த ஊழியர்கள் இழுத்து கொப்பரையில் சேர்த்தனர். தொடர்ந்து கொப்பரைக்கு எண்ணெய் ஊற்றும் பணிகளும் தொடங்கப்பட்டன.
