
மனைவி பிரிந்த சோகம் தாங்காமல் கணவர் தற்கொலை!
திருச்சி நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால்.
இவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக மனைவி கீதா ,கணவர் கோபாலை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

கோபால் நாகமங்கலத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார் .
மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த மனவிரக்தியில் இருந்த கோபால்,வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மணிகண்டம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
