
பள்ளி சென்ற மாணவி மாயம்!

லால்குடி மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜ் (60).
இவரதுமகள் லால்குடியில் உள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று பள்ளிக்குச் சென்ற இவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்த புகாரின்பேரில் லால்குடி போலீசார் விசாரணை நடத்தி மாணவியை தேடி வருகின்றனர்.
