
மனைவி மாயம்! கணவர் புகார்!
புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை .

பெரியசாமி வேலைக்குச் சென்று திரும்பியபோது அவரது மனைவியை வீட்டில் காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவரது மனைவியைப் பற்றி விவரம் தெரியவில்லை.
இது குறித்து பெரியசாமியின் புகாரின் பேரில் புலிவலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
