NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சியில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம்

0
1

திருச்சியில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம்

திருச்சி மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் உறையூர் மாநகராட்சி நகர் நல மையத்தில் வரும் சனிக்கிழமை மூன்றாம் தேதி மற்றும் ஐந்தாம் தேதி திங்கட்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

4

பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மூலம் செய்யப்படும் இந்த சிகிச்சையின் மூலம் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. சிகிச்சை 5 நிமிடங்களில் செய்யப்படும் என்றும் பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை முறை என்றும் தகுதி வாய்ந்த ஆண்கள் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு ஊரக நலப்பணிகள் சுகாதாரப் பணிகள் மற்றும் குடும்ப நலப்பணிகள் செயலகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று குடும்ப நல சிகிச்சை மேற்கொள்ளும் ஆண்களுக்கு தமிழக அரசின் ஊக்கத்தொகையாக ரூபாய் 1100 வழங்கப்படுகிறது. மேலும் ஊக்கிவிப்பாளர்களுக்கு ரூபாய் 200 சன்மானமாக வழங்கப்படுகிறது. மேலும் இந்த கருத்தடை சிறப்பு முகாம் குறித்த விபரங்கள் அறிய 0431 2460695 அல்லது 94432 46269 என்ற எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.