
சொத்து தகராறில் கைகலப்பு! காவல் நிலையத்தில் பாசக்கார உறவு!
திருச்சி பெரிய கடை வீதியைசேர்ந்தவர் ரவீந்திரன் வயது(63).
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவருக்கும் இவரது சகோதரர்களுக்கும் இடையே சொத்து பிரச்சனை உள்ளது.

இந்நிலையில் ரவீந்திரனின் சகோதரர் ராஜாராமின் மகன் வினோத்குமார் மற்றும் செல்வி ஆகியோர், ரவீந்திரனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்துகோட்டை காவல் நிலையத்தில் ரவீந்திரன், புகார் தெரிவித்தார்.
இந்த புகாரின் பேரில் வினோத் குமார்,செல்வி ஆகிய இருவர் மீதும் கோட்டை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சட்டநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
