
பணி ஆற்ற விடாமல் தடுப்பதாக துணை மீது தல…புகார்
திருச்சி செவந்தலிங்கபுரம் ஊராட்சி தலைவர் கவிதா மற்றும் ஆறு உறுப்பினர்கள்,மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் புகார் மனு அளித்தனர் .
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: –

திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியம் செவந்தலிங்கபுரம் ஊராட்சி தலைவராக இருப்பவர் கவிதா சதீஷ், துணைத் தலைவர் ரம்யா செந்தமிழன் மேலும் இந்த ஊராட்சியில் 9 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக ,துணைத் தலைவர் ரம்யா, ஊராட்சி சார்பில் நடைபெறும் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு தராமலும், பைப் லைன் பழுது நீக்கும் பொருட்கள் மற்றும் எலக்ட்ரிக் பொருட்களுக்கு கையெழுத்திடாமலும் புறக்கணித்து வருகிறார்.

மேலும் துணைத் தலைவருக்கு ஆதரவாக மூன்று உறுப்பினர்களும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் பணி ஆற்ற முடியாமல் தலைவராகிய நான் மற்றும் உறுப்பினர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். எனவே மக்களுக்கு பணியாற்றிட நியமிக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவருக்கு கையெழுத்திட அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
