
திருச்சியில் கஞ்சா வியாபாரி கைது!
திருச்சி பாலக்கரை பகுதி ,கூனி பஜார் பங்காளி தெருவில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது .

பாலக்கரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர் . இதில் கூனி பஜாரை சேர்ந்த பிரகாஷ்ராஜ்(26) என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
