
சும்மாச்சுக்கும் குரல் கொடுப்போம்…
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் உப்பு சப்பு இல்லாமல் முடிவடைந்தது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, இணை இயக்குனர் (வேளாண்மை) முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா, கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் ஜெயராமன் உள்ளிட்ட அரசு துறைகளின் உயரதிகாரிகள் மற்றும் விவசாயிகள் விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் நல சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசல் படிகட்டுகளில் அமர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல யூரியா தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. எத்தனை வருடம் நடத்தப்பட்டாலும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், திங்கள்கிழமை நடக்கும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் எல்லாமே சம்பிரதாய கூட்டம் தான் என்பதை உப்பு சப்பு இல்லாத இந்த கூட்டமும் நிரூபித்தது என்பதும்…வந்த விவசாய சங்க நிர்வாகிகளோ. தங்களை இளிச்சவாய் விவசாயி நம்ப வேண்டும் என்பதற்காக சீன் மட்டுமே காட்டினர். என்பதும்…..இதை விதியே என்று ஏற்றுக் கொள்ளும் மாவட்ட ஆட்சியர் மன நிலையும் பாராட்டுக்கு உரியதுதானே

……
