NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சியில் ஏட்டிக்குப் போட்டி சாலை மறியல்களால் பொதுமக்கள் அவதி!

0
1

திருச்சியில் ஏட்டிக்குப் போட்டி சாலை மறியல்களால் பொதுமக்கள் அவதி!

திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் கேளிக்கை விடுதி ஒன்று தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பகுதியில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள்,வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

இதனால் பொது அமைதி பாதிக்கப்படும் என்று பாஜகவினர் தெரிவித்து அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பகுதியில் பாஜகவினர் திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் கூடிய பாஜகவினர் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது, ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை எனக் கூறிய துணை ஆணையர் அன்பு, அனைவரையும் கைது செய்ய நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

4

இதைக்கேட்ட பாஜகவினர் , கேளிக்கை விடுதி துவங்கும் பகுதியில் பள்ளி கல்லூரி இருக்கின்றன. அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

3

புத்தூர் நால்ரோடு சிக்னல் அருகே பேருந்துகளை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இதையடுத்து பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலை அடங்குவதற்குள் மற்றொரு சம்பவமும் அங்கேயே அரங்கேறியது.

பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது தமிழக முதல்வரை அவதூறாக பேசினர். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த திமுகவினர் அங்கு குவிந்து கோஷமிட்டனர்.
மேலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் தமிழக முதல்வரை அவதூறாக பேசிய பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினர் புகார் அளித்தனர்.
இந்த ஏட்டிக்குப் போட்டி மறியல்களால் திருவாளர் பொதுஜனம் வெகுவாக பாதிக்கப்பட்டதுதான் விதி……

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.