
திரும்பவும் அதே உண்டியல்…
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் அளுந்தூரில் தானாய் முளைத்த முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 மாதங்களுக்கு முன்பு உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

மணிகண்டம் போலீசார் கண் காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் அதே கோவிலில் மீண்டும் உண்டியலை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது.
இது குறித்த புகாரின் பேரில் மணிகண்டம் போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தபோது 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் இரும்பு கம்பியால் உண்டியலை உடைக்க ‘முயற்சி செய்வதும், அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இருந்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றதும் தெரியவந்தது. அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
