
ஓருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்!

திருச்சி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், புலியூர் ஊராட்சியில் ஓருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதற்காக நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர்,பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அந்தநல்லூர் ஒன்றியக் குழுத் தலைவர் துரைராஜ், புலியூர் ஊராட்சித்தலைவர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
