
சிறந்த அரசு பள்ளிகளுக்கான தேர்வு பட்டியலில் திருச்சி
சிறந்த அரசு பள்ளிகளுக்கான தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ள திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட பள்ளிகள் விவரம் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த அரசு பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான சிறந்த அரசு பள்ளிகள் குறித்த தேர்வு பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலின்படி திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட திருச்சி புத்தூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, லால்குடி பகுதி எசனை கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மணிகண்டம் பகுதி கே. கே. நகர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகள் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி க.எறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அயன் பேரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வீரமநல்லூர் ஆகிய பள்ளிகளும் அரியலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடையாத்தங்குடி, மற்றும் கே. ஆர். வி .அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி லிங்கதடிமேடு , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தழுதாழை மேடு ஆகிய பள்ளிகள் இடம்பெற்றுள்ளன.
