
தமிழக அரசு தனியார் நிறுவனங்கள் மூலம் ஆள்சேர்ப்பதை கண்டித்து கவன ஈர்ப்பு இயக்கம்!
தமிழக அரசுப் பணிக்கு தனியார் ஆள்சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்தும் முடிவை கைவிடகோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சி மாநகராட்சி அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு இயக்கம் நடைபெற்றது.

தனியார் நிறுவனங்கள் மூலம் ஆட்களை பணியமர்த்துவதால் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படும். மாநகராட்சி, நகராட்சி கடைநிலை ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தான் இனி பணி நியமனம் என்ற அரசாணை 152 திரும்ப பெறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட பொருளாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட தலைவர் லெனின் மற்றும் மாவட்ட செயலாளர் சேதுபதி , 35 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தோழர் சுரேஷ் உட்பட பலர் பேசினர். இயக்கத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஷாஜகான், யுவராஜ், கோபி, சூர்யா, ஜெய்லானி உட்பட பலர் கலந்து கொண்டனர். சந்துரு நன்றி கூறினார்.
