
திமுக மாநில இலக்கிய அணி புரவலராக திருச்சி வழக்கறிஞர் செந்தில் மீண்டும் நியமனம்
திருச்சி காட்டூரை சேர்ந்தவர் வழக்கறிஞர் ந.செந்தில் பாரம்பரியமாக திமுகவை சேர்ந்த இவருக்கு கடந்த 2011 ல் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது.
10 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர் கடந்த 2018 ம் ஆண்டு திமுகவின் மாநில இலக்கிய அணி புரவலராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து தற்போது மாநில இலக்கிய அணிக்கு பல்வேறு பொறுப்புகளை பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.


அதன்படி மீண்டும் திமுக மாநில இலக்கிய அணி புரவலராக வழக்கறிஞர் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் கல்வி அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரிடம் வாழ்த்துக்களை பெற்றார்.

தற்போது திருச்சி மாநகராட்சியின் 43 வது வார்டு உறுப்பினராகவும் உள்ளார். எழுத்தின் மீது அதீத ஆர்வம் கொண்டவர் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் குறித்து 18 வகையான தலைப்புகளில் நூல்கள் வெளியிட்டுள்ளார்.
இதனை கவுரவிக்கும் விதமாக பேராசிரியர் அன்பழகன் கைகளால் எழுத்து வேந்தன், பொதுச் செயலாளர் துரைமுருகன் கைகளால் லட்சிய எழுத்தாளர் என்பது போன்ற ஆறு விருதுகளை பெற்றுள்ளார்.
