
திருச்சியில் உடல்நலக்குறைவால் மனமுடைந்து பெண் தற்கொலை!
திருச்சி தோகைமலை அருகே பள்ளக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி சங்கீதா(27).

வயிற்று வலி பிரச்சனையால் அவதிப்பட்ட சங்கீதா கடந்த 17ஆம் தேதி பூச்சி மருந்தை குடித்து மயங்கினார்.
அக் கம்பக்கத்தினர் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .
சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் இன்று அவர் இறந்தார்.
இது குறித்து சோமரசம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
