NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சியில் 5 மாவட்டங்களுக்கான வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

0
1

திருச்சியில் 5 மாவட்டங்களுக்கான வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

திருச்சி கலையரங்கத்தில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

4

நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு தலைமை வகித்தார்.
போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர், நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பேரூராட்சிகள் இயக்குநர் செல்வராஜ், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா, மாவட்ட ஆட்சித்தலைவர்கள் திருச்சி பிரதீப்குமார், அரியலூர் ரமண சரஸ்வதி, பெரம்பலூர் ஸ்ரீ வெங்கட பிரியா, புதுக்கோட்டை கவிதா ராமு, திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், பாராளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார்,
தியாகராஜன் பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், அப்துல் சமது,. மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, சின்னப்பா, க.சொ.க.கண்ணன், எம். பிரபாகரன், டாக்டர். வைரமுத்து ராஜா, மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.