
கைதுக்கே கைதா…!!??
கைது செய்யப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியினரை விடுதலை செய்யக்கோரி திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் மதுபான கடைக்கு அனுமதி அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர் .

அப்போது அவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்து பேசியதாக தெரிகிறது.
இதுகுறித்து திமுகவினர் காவல்துறையில் புகார் செய்தனர் .
முக்கிய நிர்வாகிகள் ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 9 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

திருச்சி, உறையூர், பொன்மலை, தில்லைநகர், பாலக்கரை, வேர் ஹவுஸ், ஜீயபுரம், திருவெறும்பூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன .
இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியினரும் கைது செய்யப்பட்டு ஆங்காங்கே உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
