
உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!
வருவாய்த் துறையின் மூலம் பார்வையற்றோருக்கு வழங்கப்படும் 1000 ரூபாய் உதவி தொகையை மாற்று திறனாளிகள் நலத்துறைக்கு மாற்றி வாழ்க்கை செலவினம் உயர்வு கருதி ரூபாய் 5000 வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பார்வையற்றோர் நல சங்கங்களின்கூட்டு நடவடிக்கை குழு கூட்டமைப்பு சார்பில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஊர்வலமாக புறப்பட்டு தலைமை தபால் நிலையம் ரவுண்டானாவில் உள்ள மகாத்மா காந்தியடிகள் சிலையை அடைந்தனர்.
அங்கு தலைவர் சரவணன்,செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் வரதராஜன் ,உள்ளிட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் ஒருங்கிணைந்து கோரிக்கை மனுவை மகாத்மா காந்தி சிலையிடம் வழங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
