
பல நாள் திருடனுக்கு காப்பு!
துறையூர் பெருமாள் மலை அடிவாரம் பகுதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அந்த வழியாக வந்த வாலிபரை விசாரணை செய்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

அவரை, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர் விநாயகர் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் லோகேஸ்வரன் (35) என்பதும், சிங்களாந்தபுரம், மெய்யம்பட்டி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
லோகேஸ்வரனை கைது செய்த போலீசார்,அவரிடம் இருந்து 24 பவுன் தங்க நகை, 3 இரு சக்கர வாகனம், 750 கிராம் வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
