
திருச்சி அருகே பள்ளி சென்ற மாணவி மாயம்!

திருச்சி மாவட்டம் தொட்டியம் கோதரசநல்லூரை சேர்ந்தவர் பழனிவேல். இவரது 17 வயது மகள் தொட்டியம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டுச் சென்ற அவர், வீடு திரும்பவில்லை.
இது குறித்த புகாரின்பேரில் தொட்டியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
