
தர்ம அடியால் இறந்த திருடன்… அடித்த 4 பேர் கைது…
திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் பகுதியில் தனியார் மர அறுவை மில்செயல்பட்டு வருகிறது. இதில் நைஜீரியா பர்மா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தேக்கு , படாக், கோங்கு உள்ளிட்ட உயரிய மர வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு வீடு கட்டுமானத்திற்கும் கட்டில், பீரோ உள்ளிட்ட பர்னிச்சர் பொருள்களும் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் இன்று (3.12.2022) அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம
நபர் ஒருவர் பூட்டி இருந்த மில்லில் நுழைந்து திருட முயன்றார். அப்போது அங்கிருந்த அசாமை சேர்ந்த சாமில் பணியாளர்கள் நான்கு பேர் திருடனை மடக்கி பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
காலையில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
டி.எஸ்.பி சரவணன் தலைமையிலான போலீசார் சென்று பார்த்தபோது மர்மநபர் இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் இறந்தவர் யார் என்று விசாரித்து வருகின்றனர்.மேலும் மர்ம நபரை கட்டி வைத்து தாக்கிய 4 பேரையும் கைது செய்தனர்.
