
திருச்சியில் மருத்துவக் கல்லூரி மாணவர் திடீர் மாரடைப்பால் மரணம்!
கடலூர் மாவட்டம் கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் – ஜீவா தம்பதியர், மூத்த மகன் பிரேம்நாத், திருச்சி கி. ஆ. பெ. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனியார் உணவகத்தில் பிரேம் நாத் ,தனது சக நண்பர்களுடன் இணைந்து மதிய உணவு சாப்பிட்ட சென்றார். அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சக மருத்துவ மாணவர்கள் அவரை உடனடியாக மீட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு 2 மணி நேரத்திற்கு மேலாக கொடுக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பிரேம்நாத் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து அவரது உடலுக்கு கல்லூரி முதல்வர் நேரு மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
