
திருச்சியில் பாம்பு கடித்து தொழிலாளி பலி!

திருச்சி ஏர்போர்ட் குளவாய்பட்டி ரோடு, கலைஞர் நகரை சேர்ந்தவர் குமார்(46). தனது வீட்டைச் சுற்றி இருந்த புல் புதர்களை அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது.
திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஏர்போர்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
