
திருச்சி அருகே கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்து!
அதிமுக ஆட்சியின் போது, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர், சுப்பிரமணியன்.

இவரது சகோதரர் தமிழ்ச்செல்வன், விராலிமலையில் இருந்து நம்பம்பட்டிக்கு, காரில் சென்றார்.
நம்பம்பட்டி அருகே கார் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த தனியார் பேருந்து கார் மீது மோதியது.
இதில் தமிழ்ச்செல்வன் அவரது மகன் ஆகிய இருவரும் காயங்களோடு மீட்கப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
