
திருச்சி அருகே வாலிபர் மர்மமான முறையில் உயிரிழப்பு!
மணப்பாறையை அடுத்த கரும கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ் மகன் அசோக்குமார் (27).
மணப்பாறை பஜாஜ் பைனான்ஸில் வேலை பார்த்தார்.

நேற்று இரவு, துவரங்குறிச்சி சாலை வடுகபட்டி மாயவதார பெருமாள் கோவில் அருகில், ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.
அருகில் அவர் வந்த டூவீலரும் நசுங்கி கிடந்தது. தகவலறிந்த மணப்பாறை போலீசார் அசோக் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

மேலும் அசோக் குமார் தானாகவே கீழே விழுந்த அடிபட்டு இறந்தாரா அல்லது ஏதேனும் வாகனம் அவர் மீது மோதி விட்டு சென்றதா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
