
இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் திருச்சியில் 18 ஜோடிகளுக்கு இலவச திருமணம்!
இந்து சமயஅறநிலைத்துறை சார்பில் வருடந்தோறும் இலவச திருமணம் நடத்திய வைப்பது வழக்கம். இத்தாண்டு, திருமண நிகழ்வு திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (4.12.2022) காலை துவங்கி வைத்தார்.

அந்த வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான மாரியம்மன் மண்டபத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 18 இணைகளுக்கு மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை கே.என்.நேரு திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சீ.கதிரவன், அ.சௌந்தர பாண்டியன், செ.ஸ்டாலின் குமார், ந.தியாகராஜன், மாவட்ட ஊராட்சி தலைவர் த. ராஜேந்திரன், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர்கள் செல்வராஜ், கல்யாணி, மாரிமுத்து, மற்றும் உதவி ஆணையர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மணமக்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்
