NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு! 

0
1

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு! 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகரம் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது மேலும் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் அன்னதானம் வழங்கல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அதிமுகதிருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் சோமரசம்பேட்டை, குழுமணி, ஜீயபுரம், பெட்டவாய்த்தலை, முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் ஆகிய இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி தலைமை வகித்தார்.

4

மணிகண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்குமார், அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கோப்பு நடராஜன், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் செல்வராஜ், மாவட்ட மீனவரணி செயலாளர் பேரூர் கண்ணதாசன், ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்திக், எட்டரை அன்பரசு, வழக்கறிஞர் தேவா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஜெயலலிதா உருவப்படத்துக்கு மரியாதை செய்யப்பட்டது ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

3

மணப்பாறை நகரம் சார்பில்வேப்பிலை மாரியம்மன் கோவில் அருகில் நடந்த நினைவு நாள் நிகழ்ச்சிக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை வகித்து ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்.

நிகழ்வில் மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சந்திரசேகர் மாவட்ட பொருளாளர் நெட்ஸ்இளங்கோ மணப்பாறை நகர செயலாளர் பவுன் ராமமூர்த்தி மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன், மற்றும் நகர கவுன்சிலர்கள் எத்திராஜ், கௌஷிக், ராஜா பக்தி பாஸ்கர் செவலூர் வினோத் ராமச்சந்திரன் ராமமூர்த்தி முன்னோடிகள், வேலுச்சாமி, கவுன்சிலர்கள் பழனிச்சாமி சோபியா, காவியக்கண்ணன், மகேஷ் பழனிசாமி, கோவை முருகன், சோலைராஜ் சங்கிபட்டி
சம்பட்டி அழகர் மாவட்ட , பகுதி, வட்ட செயலாளர்கள், வட்ட நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.